SLTC Logo

தகவல் தொழிநுட்பவியல் இளைமாணி

செயல்முறை தகவல் தொழில்நுட்பவியல் இளைமாணி படிப்பு என்பது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து SLTC ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் தனித்துவமான மூன்றாண்டு இளைமாணி பட்டப்படிப்பு ஆகும்.

நாடு முழுவதும் 76 நிலையங்களில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகியவற்றுடன் இணைந்து

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு மையத்தில் உங்கள் படிப்பைத் தொடங்கி, கொழும்பின் மையத்தில் உள்ள TRACE நிபுணர் நகரில் உள்ள SLTC TRACE வளாகத்தில் உங்கள் இறுதி ஆண்டை நிறைவு செய்யுங்கள்.

இந்த பட்டப்படிப்பின் நெகிழ்வான கற்றல் முறையானது, நாடு முழுவதும் அமைந்துள்ள 76 மையங்களில் ஏதேனும் ஒன்றில் உங்கள் சொந்த முயற்சியில் படிக்க உங்களை அனுமதிக்கிறது. முழுநேர வேலையில் ஈடுபட்டவாறே, பிரிதொரு விடயத்தை அல்லது ஒரு வணிகத்தை நடத்திக்கொண்டு இருக்கும் போதே உங்கள் படிப்பை தொடர கூடிய முழு சுதந்திரத்தையும் வழங்குகிறது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகியவற்றுடன் இணைந்து

இந்தத் திட்டதின் பாடத்திட்டமானது, தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறையின் வள்ளுனர்கள் , SLASSCOM, TRACE, மற்றும் FITIS போன்றவற்றின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் அனைத்து பட்டதாரிகளுக்கும் சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும், இந்தத் திட்டம் தேவையான அறிவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு வெற்றிகரமான பாதையை உருவாக்க ஒரு தொழில்முறை நிபுணருக்குத் தேவையான தேர்ச்சிகள் மற்றும் திறன்களை வளர்ப்பதற்கும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் இறுதியாண்டு ஆய்வுகள் TRACE expert நகரத்தில் SLTC Trace வளாகத்தில் நடத்தப்படும், இது இளைமாணி பட்டதாரிகளுக்கு சிறந்த பின்புலத்தையும், தகவல் தொழில்நுட்பதில் வெற்றிகரமான பாதையை உருவாக்குவதற்கும் ஒரு திறமையுள்ள தகவல் தொழில்நுட்ப நிபுணரை வெளிப்படுத்துவதற்கும் உதவும்.


பாடங்களை நடத்துதல் : கலாநிதி. முஹம்மது அஸ்மீர்


பாடநெறிக் காலம் : மூன்று வருடங்கள்


உயர் கல்வி அமைச்சின் அனுமதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) அங்கீகாரம்

பிரவேசத் தகைமை

நுழைவு போதுமானது G.C.E (உயர்நிலை) தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் மூன்று (3S) சாதாரண மதிப்பெண்கள்

பாடநெறி கட்டணம்


முதல் ஆண்டில் மாதாந்தக்
கட்டணம்  

ரூபா 10,250



இரண்டாம் ஆண்டில் மாதாந்தக் கட்டணம்

ரூபா 15,375



மூன்றாம் ஆண்டில் மாதாந்தக் கட்டணம்

ரூபா 20,500


வேலை வாய்ப புகள்

படிப்புக் காலத்தின் முடிவில், இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு
தொழில்துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான
சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

IT Officer
Web Developer
Software Tester
Software Developer
Mobile Application Developer

Building Services Manager
Business Analyst
Web Developer
Software Tester
IT Manager

மேலும் தகவலுக்கு : 0707 866 866